இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை(04-06-2024) எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திருச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஜமால் முகமது கல்லூரியில் எண்ணபடுகின்றன. வாக்கு எண்ணிக்கை 7 அறைகளில், 18 முதல் 25 சுற்றுகளாக நடைபெற உள்ளது. திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திருச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, திருச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பிரதீப்குமார் மேற்பார்வையில், 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா ஒரு அறை வீதம் 6 அறைகளிலும், தபால் ஓட்டுகள் தனி அறையிலும் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் தயார்ப டுத்தப்பட்டுள்ளன. ஒரு சுற்றில் 14 ஓட்டுச்சாவடிகளின் ஒட்டுமிஷின்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 6 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 84 மேஜைகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு மேஜையிலும் தலா ஒரு
மேற்பார்வையாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் என 3 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். 6 சட்டசபை தொகுதிகளுக்கும் இந்த அறையில் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலு வலர்கள், ஊழியர்கள் அமரும் பகுதியில் மற்றவர்கள் யாரும் நுழையாத வகையில் சுற்றிலும் தடுப்புக் கம்பி கூண்டு அமைக் கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பணியை பார்வையிடும் வேட் பாளர்களின் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் நிற்கும் பகுதியிலும் அடைப்புகளுடன் கூடிய கம்பி கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முகவர்கள் பார்வையிட அறையின் இருபுறமும் அனும திக்கப்படுவர். எனவே, இருபுறமும் தனித்தனியே கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு மொத்தம் 11 மேஜைகள் அமைக் கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு மேஜையில் முப்படை வீரர்களின் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணபடும். அங்கீகரிக்கப்பட்ட நபர்களை தவிர்த்து வேறுயாரும் நுழைய இயலாது.
முன்னணி நிலவரங்கள் உடனுக்குடன் மைக் மூலம் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது ஆயிரத் துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கை 18 முதல் 23 சுற்றுகள் வரை எண்ணப்பட உள்ளது. கந்தர்வக்கோட்டை சட்டசபை தொகுதி ஓட்டுகள் 18 சுற்றுகளாகவும், புதுக்கோட்டை, திருச்சி கிழக்கு தொகுதி ஓட்டுகள் 19 சுற்றுகளாகவும், திருச்சி மேற்கு தொகுதி ஓட்டுகள் 20 சுற்றுகளாகவும், திருவெறும்பூர் தொகுதி ஓட்டுகள் 22 சுற்றுகளாகவும், ஸ்ரீரங்கம் தொகுதி ஓட்டுகள் 25 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன.
Comments are closed.