ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் திருச்சியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் பங்கேற்க 4 நாள் பயணமாக கடந்த 14ஆம் தேதி திருச்சி வந்தார். இதன் ஒரு பகுதியாக, இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். ரெங்கநாதர், ரெங்கநாச்சியார், தன்வந்திரி, சக்கரத்தாழ்வார் ராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். இவருக்கு ரங்கா ரங்கா கோபுரம் முன்பு கோவில் மணியக்கார் ஸ்ரீதர், அர்ச்சகர் தீபக், ஸ்ரீரங்கம் கோவிந்தன், சேது அரவிந்த் உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வருகையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒரு மணி நேரமாக பக்தர்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருக்கும் பக்தர்கள் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.இதனால் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். இவரது வருகையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Comments are closed.