நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அவர் பேசியிருக்கும் வீடியோவில், “இது எங்களுடைய ஐடி கார்டு. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை. நான் எடுத்துக்கொண்டேன். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட கட்சியின் உறுதிமொழியை படியுங்கள்.உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் விஜய் சொன்ன உறுதிமொழி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், “தோழர்களாய் ஒன்றிணைவோம் தமிழ்நாட்டு மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாக ஒன்றிணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், கட்சியின் உறுதி மொழியை படித்துவிட்டு கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை க்யூ ஆர் கோட் இணைப்புகளை பயன்படுத்தி மிகவும் எளிமையான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்” என எழுதப்பட்டு அத்துடன் க்யூஆர் கோடும் இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.