சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கவிதா(44) என்கிற பெண் பயணம் செய்தார். அவர், பெரிய பையுடன் திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கினார். அவர் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் வைத்திருந்த பையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அதில், கட்டு கட்டாக ரூ.40 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டதற்கு புதுக்கோட்டையில் உள்ள தனது சகோதரர் வீடு கட்டி வருவதாகவும் அவரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்ததாக கூறினார். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. அதன்பேரில், அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர். வருமானவரித்துறை அதிகாரிகளும் கவிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1
of 841
Comments are closed, but trackbacks and pingbacks are open.