Rock Fort Times
Online News

வியட்நாம் படகு விபத்து; திருச்சியைச் சேர்ந்த 3 பேர் உள்பட 18 பேர் பலி…! (வீடியோ இணைப்பு)

வியட்நாம் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பூ குவாக் தீவு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கியவர்களில் 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்கள் உட்பட குறைந்தது 18 இந்தியர்கள் பலியாகி இருக்கின்றனர். இந்த விபத்தில் திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவரும் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூன்று நபர்கள் பலியாகி இருக்கின்றனர். இதேபோல் பழனியைச் சேர்ந்த ஒருவரும் பலியாகி இருக்கின்றார். மேலும், காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து வியட்நாம் படகில் சென்ற 32 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழர்களின் பெயர்கள் அதிகமாக இருக்கின்றன. விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களில் 10 பேர் தமிழர்கள் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதுபற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு அறை:

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பல இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு ஒன்று, வியட்நாமின் பு குவோக் தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர சம்பவம் நடந்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பவம் குறித்த துல்லிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகவல்களையும், உதவிகளையும் வழங்க இந்திய தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை, +84 36 281 7930, +84 91 552 37 14 and +84 33 452 0414 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஹனேயிலும ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை +84 91 308 9165 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எந்தவொரு உதவிக்கும் அல்லது சந்தேகங்களுக்கும் உதவ நாங்கள் தயாராக உள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் பயணித்தவர்களின் பெயர்கள் முழு விபரம்:(பெயர்தந்தை பெயர்) 

1. பாலசுப்ரமணி – பழனிசாமி

2. செல்வம்- பிச்சையா

3. செந்தில் குமார்-ஜெயவேல்

4. சிவகுமார்-முத்துக்குமாரசாமி

5. நிர்மல் குமார் – சேதுராமன்

6. முருக பிரபு-ஆறுமுகம்

7. ரூபன் செல்வ நாதன் – ஜேக்கப் யேசுபாதம்

8. ஸ்ரீதர்-தர்மராஜன்

9. விக்னேஷ்வர்-ராதாகிருஷ்னான் கோபால்

10. ராமசுப்பு – அண்ணாவி

11.அபுதல்கா-ஜாஹிருதீன்

12 ஸ்ரீதர்-சுந்தரராஜன்

13. வம்ஷீதர் செல்லூர் ராம்ராஜ்

14. செஞ்சடைவேல்-குப்புசாமி

15. நாகலமடுகு-சோஹன்

16. நல்லபேட்டை ஆதிசேஷய்யா -ரவிதேஜா

17. ஷேக் அப்துல்லா – அப்துல் மஜித்

18. ராஜீவ் – கலைவாணன்

19. பாலாஜி நடேசன்

20. வினய குமார் – சித்தாபுரம் பாஸ்கரா

21. ரவிசங்கர் சுகுமாரன்

22. விபுல் உத்தம் சந்த

23. சந்தோஷ் குமார் – சாந்திலால்ஜெயின்

24.பாபு-குப்புசாமி

25. அழகுராஜன்- சிவசாமி

26: வசந்த குமார் – ஆனந்தன்

27. ஸ்ரீதர் – முடியம்

28. ஜெய லக்ஷ்மி கெல்லி

29. கிஷோர் – கெல்லி

30. அவிகோட் செரியன் தாமஸ் தாமஸ்

31. லோவெனி – தாமஸ்

32. ரமேஷ் குமார் – பேச்சியப்பன்

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்