தேசிய பாடல், தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தேசிய கீதம், தேசிய பாடல் இசைப்பது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அனைத்து உத்தரவுகளும் தொகுக்கப்பட்டு இணைப்பு–1 மற்றும் இணைப்பு–2 ஆக சேர்க்கப்பட்டுள்ளது. தேசிய பாடல் மற்றும் தேசிய கீதத்துடன் ஒரு மாநிலப் பாடல் பாடப்படும் போது, முதலில் தேசியப் பாடலும் அதைத் தொடர்ந்து, தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் பதவியேற்பு விழா, குடியரசுத் தலைவர், ஆளுநர், துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், தேசியக்கொடி அணி வகுப்பு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையற்றும் நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சிகளுக்கு முன்னும் பின்னும் தேசிய பாடலும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Comments are closed.