Rock Fort Times
Online News

தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கும் வீடியோ….சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு !

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உடன் தங்குபவர்கள், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் , செவிலியர் பயிற்சி மாணவ-மாணவிகள் என இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். இவர்கள் உணவு மற்றும் சிற்றுண்டி வசதிக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கேன்டீன்கள் அமைக்க உரிமம் பெறுவதற்கு தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில், இங்கு கேன்டீன் நடத்தும் ஒருவர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு கட்டு கட்டாக லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இங்குள்ள கேன்டீன்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக 3 இணைப்புகள் உள்ளதாகவும், அதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தன்னிச்சையாக துண்டித்ததாகவும், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக மேற்கண்ட நபர், முதல் தவணையாக ரூ.6.5 லட்சம் மற்றும் இரண்டாவது தவணையாக ரூ.3.5 லட்சம் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கும் காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன. மேலும், பல்வேறு வகையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் ரூ.16 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவக் கல்லூரி முதல்வர் லஞ்சம் வாங்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்