Rock Fort Times
Online News

திருச்சி அருகே மகளின் தலையில் பாறாங்கல்லை போட்டுக் கொன்ற தாய்…!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அழகரை அரியானம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35). இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஹேமேஸ் (4) என்ற மகன் உள்ளார். சமீபத்தில், மஞ்சுளாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர், லால்குடி தாளக்குடியில் வசிக்கும் தாய் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்தார். பின்னர் நேற்று தமிழக அரசின் கலைஞர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் கொடுப்பதற்காக கணவர் வீட்டுக்கு வந்தார். அவருடன் தாய் அன்னக்கிளியும் வந்திருந்தார். அப்போது சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்த கணவர், மஞ்சுளாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். அதற்கு மஞ்சுளா மறுத்தார். தாய் சொல்லியும் கேட்கவில்லை. இதனால், கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரவு அவர்கள் படுத்து தூங்கி விட்டனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லாமல் இப்படி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறாரே என ஆத்திரமடைந்த அவர் மஞ்சுளா தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தலையில் இன்று அதிகாலை பாறாங்கல்லை எடுத்து வந்து போட்டுள்ளார். இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர், அன்னக்கிளி தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டி யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைதம்பி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்ல மறுத்து அடம்பிடித்த மகளை தாயே கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்