தீர்க்கப்படாத திருவானைக்காவல் அடிமனை பிரச்சனை: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்களை நிறுத்த முடிவு…!
திருச்சி திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவானைக்காவல் சுமங்கலி மஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு எம்.மாரி என்கிற பத்மநாபன் தலைமை தாங்கி பேசினார். இந்த கூட்டத்தில் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருவானைக்காவல் அடிமனை பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்களை நிறுத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானத்தின்படி கூட்டமைப்பு உறுப்பினர்கள் 5 வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றுள்ளனர். அதன்படி, 25 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படும். தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அடிமனை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.