Rock Fort Times
Online News

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வாலிபர்களிடம் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு…! * தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை !

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. முதலமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாகனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொடைக்கானலின் முகப்பு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து 4 வாலிபர்கள் வந்த ஜீப்பை சோதனை செய்தபோது துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. உடனே அந்த 4 வாலிபர்களும் வேகமாக ஜீப்பை எடுத்து தப்பி சென்றனர். உடனே, தேர்தல் பறக்கும் படையினர் கொடைக்கானல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஜீப்பை பின்தொடர்ந்தனர். சுமார் 3 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து சென்று அவர்களை மடக்கினர். பின்னர் அந்த துப்பாக்கி மற்றும் ஜீப்பை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், 4 வாலிபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்