Rock Fort Times
Online News

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக பரப்புரை திடீர் ரத்து…!

மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருந்த பிரச்சார பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினரின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள நிலையில் அடுத்த வாரமும் பிரசாரம் செய்ய உள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பாஜகவின் கூட்டணி வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.
இவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் ஏப்ரல்  4 மற்றும் 5ம் தேதிகளில்  பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.  இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வருவதாகவும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டும் அவர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 5ம் தேதி தென்காசி, கன்னியாகுமரியில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது.  ஆனால், திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்தார். தவிர்க்க முடியாத காரணத்தால் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்