Rock Fort Times
Online News

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு பாரத முன்னேற்றக் கழகம் ஆதரவு…!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நல்லாட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.  2021 சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளான  குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ₹ 1000 வழங்கும் திட்டம்,  மகளிர்,  திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் இலவச பேருந்து திட்டம்,  உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ₹1000 வழங்கும் புதுமை பெண் திட்டம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும்  இரண்டரை ஆண்டு ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றி தேசத்தின் முன்னோடி முதல்வராக திகழ்கின்றீர்கள்.யாதவ சமுதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றெண்ணி தமது அமைச்சரவையில் எங்கள் சமூகத்தினை சேர்ந்த ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன், கே.ஆர். பெரியகருப்பன் போன்றோரை அமரவைத்து அழகு பார்த்துள்ளீர்கள்.

மேலும், மூன்று மாநகராட்சி துணை மேயர்களாக சென்னை சைதை மகேஷ்குமார்,  திருச்சி திவ்யா தனக்கோடி, நெல்லை கே.ஆர்.ராஜூ ஆகியோரை நியமித்து யாதவ சமுதாயத்திற்கு உரிய பிரதிநித்துவமும் வழங்கி உள்ளீர்கள்.  தமிழகத்தில் உள்ள  39 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடிய அளவில் சுமார் 2 லட்சம் யாதவ வாக்காளர்கள் உள்ளனர் என்பதனை தாங்கள் அறிவீர்கள். இருப்பினும்  பெரும்பான்மை மக்களாக இருந்தும் நிர்வாகத்துறை,  நீதித்துறை,  காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் யாதவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.  இதற்காகவே  2011 ல் துவக்கப்பட்ட யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது.  இந்நிலையில்,  யாதவ சமுதாய மக்களின் எதிர்கால நலன் கருதி  கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைத்து தரவும், அதற்கு யாதவ சமுதாயத்தினை சேர்ந்த ஒருவரையே தலைவராக அமர்த்திடவும்,  ஆவின் சேர்மன் பதவிகள் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவிகளில்  யாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கிடவும்,  தொடர்ந்து வரவிருக்கின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் யாதவ சமுதாயத்துக்கான பிரதிநித்துவத்தினை உயர்த்தி வழங்கிட முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் அசைக்க முடியாத வகையில் வேரூன்றி விட்டது.

அதனடிப்படையில் எங்களது உயர்நிலை செயல் திட்ட குழு எடுத்த முடிவின்படி யாதவர்களுக்கான அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் தங்கள் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பது என முடிவெடுத்து உள்ளோம்.  ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை நிர்ணயிக்க கூடிய யாதவ வாக்காளர்களிடம் திராவிட முன்னேற்றக் கழக அரசு எங்கள் சமுதாயத்துக்கு செய்த விசயங்களை எடுத்துரைத்து வாக்குகளை பெறுவோம்.  மேலும், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு, திருச்சி வேட்பாளர் துரை வைகோ, தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி  உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் 40 தொகுதி வேட்பாளர்களின் வெற்றிக்கு முழு வீச்சில் பாடுபடுவோம் என உறுதியளிக்கின்றோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்