Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது- ஒருவர் தப்பியோட்டம் டிப்பர் லாரி, ஜேசிபி எந்திரம் பறிமுதல்…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா,  மேலூர் கொள்ளிடம் ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் ஜேசிபி எந்திரம் உதவியுடன்  மணல் கடத்தலில் ஈடுபடுவதாக ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் வெற்றிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  தகவலின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மணல் அள்ளி கடத்த முயன்றவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
அப்போது டிப்பர் லாரி உரிமையாளர் கல்வராயன் என்கிற வடிவேல் அங்கிருந்து தப்பியோடி விட்ட நிலையில், முத்துக்குமார் மற்றும் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. மணல் கடத்தல் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.  இப்பகுதியில்  மணல் மாஃபியாக்கள், அரசியல்வாதிகள் காவல்துறையினர் உதவியுடன் தொடர்ச்சியாக மணல் கடத்தலில்  ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்