Rock Fort Times
Online News

திருச்சியில் துயர சம்பவம்: வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழப்பு…!

திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை தனலட்சுமி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் புவனேஷ் குமார். இவரது மனைவி பவானி (வயது 58). இவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே, சக ஆசிரியர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  அவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது  குறித்து ஆசிரியை யின் கணவர் புவனேஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். வகுப்பறையில் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்