தமிழகத்தில் முதலமைச்சர் ஆக விஜய் பதவியேற்றதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகம் முழுவதும் இன்று( மே 29) 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் சாய் குமார் பிறப்பித்துள்ளார். அதன்படி,
உயர்க்கல்வித்துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, பொது சுகாதாரம், மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக லலிதா, இணை செயலாளர்களாக கமல் கிஷோர் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை புதிய கலெக்டராக ஆனந்த் மோகன் நியமனம். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு . பிரதாப் மாற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறையின் சிறப்பு செயலாளராக சுந்தரவள்ளி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை துணை செயலாளராக அழகு மீனா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி, ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக அமுதவள்ளி ஐஏஎஸ் , மதுரை மாவட்ட கலெக்டராக ஆகாஷ் ஐஏஎஸ் நியமனம். வேலூர் கலெக்டராக லீலா அலெக்ஸ், செங்கல்பட்டு கலெக்டராக வீரப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு கிராமபுற வளர்ச்சித் திட்ட தலைமை செயல் அலுவலராக வி.ஆர்.சுப்புலட்சுமி, கன்னியாகுமரி கலெக்டராக பிரதாப், திருவண்ணாமலை கலெக்டராக வந்தனா கர்க்,
தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக உமா, தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநராக ரஞ்சித் சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி கலெக்டர், ஆணையர்,
திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் வி.சரவணன் தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடத்திற்கு பிரதீப் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் மதுபாலன் நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.