Rock Fort Times
Online News

திருச்சி காவிரி பாலம் அருகே திடீரென மரம் முறிந்து விழுந்ததால் சாலையில் சென்ற இருவர் படுகாயம்…!

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல திருச்சியில் லேசான தூறலுடன் காற்று வீசி வருகிறது. இந்நிலையில்
திருச்சி காவிரி பாலம் மாம்பழச்சாலை மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு மரம் வேரோடு திடீரென சாலையில் சாய்ந்தது. அப்போது அந்த வழியாக சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுப்பையா ( வயது 47) மற்றும் பெயர் தெரியாத மற்றொருவர் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டனர்.
மரம் விழுந்ததில் மின் வயர்களும் அறுந்து தொங்கின. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மரத்தின் அடியில் சிக்கி கிடந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. மரம் வெட்டி அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்