ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…* வருகிற 31-ம் தேதி திங்கட்கிழமை நடக்கிறது..!
ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 31-ம் தேதி( திங்கட்கிழமை)திருச்சியில் நடக்கிறது. அன்றைய தினம் காலை 9:45 மணி அளவில் தொடங்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி தெற்கு துணை போலீஸ் கமிஷனர் மணிகண்டன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர், போர்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் முன்னாள் கவர்னர் டாக்டர் ஏ. ஜமீர் பாஷா, திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெஷ்மி நாராயணன், பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் ஜே.ஜி.ஆர். சத்தியசீலன், துணை முதல்வர் சுயநிதி பிரிவு சி.ரவிதாஸ், மாணவர் மற்றும் பணியாளர் நல சங்க தலைவர் கே பிரேம்குமார், வெளிப்புற நிகழ்வு செயல்பாடுகளுக்கான முதல்வர் வி. ஆனந்த் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள இருக்கின்றார்கள். தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வு தொடங்குகிறது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், சாலை விதிமுறைகளை தெரிந்துகொள்வது போன்றவைகளை ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் விழிப்புணர்வு கொடுக்க இருக்கின்றார்கள். இவைகள் பிஷப் ஹீபர் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஜெ. ராஜ்குமார் ஒருங்கிணைக்க, தலைவர் என். முத்துக்குமார், செயலாளர் ஏ. ஆசைத்தம்பி, பொருளாளர் கே.நாகராஜன் மற்றும் கல்லூரி எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டி பொறுப்பாளர்கள், ரோட்ராக்ட் பொறுப்பாளர்கள், சாலை பாதுகாப்பு பொறுப்பாளர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

Comments are closed.