Rock Fort Times
Online News

காமராஜர் பிறந்த நாளில் கோவில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ்…!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பழைய கோவில்களில் ரூ.125 கோடியில் திருப்பணிகள் நடைபெறும். திருக்கோயில் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் அமைக்கப்படும். ஆழ்வார்கள், சித்தர்கள் பெயரில் விழாக்கள் நடத்தப்படும். திருக்கோயில்களிலே பிரசாதம் தயாரிக்கும் திட்டம் விரிவாக்கப்படும். திருக்கோவில் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு திருக்கோவில் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சேர்க்கை முன்னுரிமை வழங்கப்பட்டு கல்விக் கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். கோவில் பெண் பணியாளர்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ள 9 மாத மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்படும். மீண்டும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படும். திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லா போக்குவரத்து சேவைக்கு 4 சிற்றுந்துகள் வாங்கப்படும் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்