திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி:* பாலக்குறிச்சி புனித ஜேம்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை…!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில், குறுவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் பளுவஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டிகளில் மருங்காபுரி வட்டத்தைச் சார்ந்த அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. இதில்,
திருச்சி மாவட்டம், பாலக்குறிச்சி புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அதிக புள்ளிகள் பெற்று மாணவர் பிரிவிலும், மாணவிகள் பிரிவிலும் முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்தனர். மேலும், 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவிகள் தாரணி, சகானா ஆகியோரும், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவன் மோகன பிரசாத் மற்றும் மாணவி லோகேஸ்வரியும், 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி கபிஷாவும் அதிக புள்ளிகள் பெற்று தனிநபர் பட்டத்தினை பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், வெற்றி பெற ஊக்கப்படுத்திய அருட்சகோதரர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும்பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் வெகுவாக பாராட்டினார்.

Comments are closed.