ஈரோட்டில் அ.ம.மு.க. நிா்வாகிகளை சந்தித்து டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினாா். ஈரோடு கிழக்கு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில் தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெறப்போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதையடுத்து வேட்பாளரும் வாபஸ் பெற்றார். இதற்கிடையே டி.டி.வி. தினகரன் நேற்று கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள ஈரோடு வந்தார். இன்று காலை டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் , இதில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.