திருச்சி கோட்டை சிங்காரத்தோப்பு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி பேருந்து ஒன்றில் பயணம் செய்த பயணி ஒருவரிடம் செல்போனை பறித்த வழக்கில் ரௌடி வசந்தகுமார் ( வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மீது மாநகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 33 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோட்டை போலீசார் பரிந்துரைத்தனர்.அதன் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்தியப்பிரியா ஐபிஎஸ் , ரௌடி வசந்தகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் திருச்சி மத்தியசிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.