திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா வருகிற15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. மேளதாளங்கள் முழங்க கோவில் நிா்வாகம் சாா்பில் கொண்டு வரப்பட்ட முதல் பூக்களால் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வரும் பூக்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. பக்தர்கள் சங்கத்தின் சாா்பில் பூக்களை ரதத்தில் எடுத்துச் சென்று அம்மனுக்கு பூஜை செய்யும் வைபவமும் நடக்கிறது. இதேபோல, பல்வேறு அமைப்பினரும் பூக்களை சுமந்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லட்சுமணன், செயல் அலுவலா் சரவணன் மற்றும் கோவில் பணியாளா்கள், பக்த பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.