Rock Fort Times
Online News

திருச்சி அருகே மணல் கடத்திய பாஜக பிரமுகர் உள்பட 3 பேர் கைது…!

திருச்சி மாவட்டம், முசிறி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் மற்றும் அவரது உதவியாளர் முசிறி பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியினை மறித்து சோதனை செய்தபோது அதில் காவிரி மணல் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த லாரி மற்றும் அதில் வந்த 3 பேரையும் முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் மணல் கடத்தலில் ஈடுபட்டது தொட்டியம் அருகேயுள்ள மாகாளிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் யோகேஸ்வரன்(26), கோவிந்தாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் சசிகுமார் (25), தொட்டியபட்டியை சேர்ந்த பாஜக திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் மணி (50), என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்