திருச்சி தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் சுதந்திர தின விழா- மாவட்ட தலைவர் டி.குணா தேசிய கொடியேற்றினார்…!
தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், 78-வது சுதந்திர தின விழா மணப்பாறையில் இன்று(15-08-2024) கொண்டாடப்பட்டது. மணப்பாறை கோவில்பட்டி சாலை அருகே உள்ள காமராஜர் சிலை முன்பாக கொடியேற்று நிகழ்ச்சியும், த.மா.கா. புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட தலைவர் டி. குணா தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். பின்னர் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு த.மா.கா. மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் சமுத்திரம் வி. கணேஷ், மாநில இணை செயலாளர் ஐ எஸ்.விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் அம்மன் ஆறுமுகம் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஏ. விஜயகுமார் நன்றி கூறினார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடந்து முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் 97 கோடி வாக்காளர்களை வாக்களிக்க வைத்து மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாக நடத்திக் காட்டிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வது. மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இக்கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. ஆறு லட்சத்துக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வரும் சமூக ஆர்வலர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நடத்துனர் கோவையைச் சேர்ந்த யோகநாதனை புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தலைவரின் தேநீர் விருந்துக்கு அழைத்துள்ள மத்திய அரசுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் மணப்பாறை நகர தலைவர் ஆர்.டி.குமார், மாவட்ட துணைத் தலைவர் ஏ. விஜயகுமார், வட்டார தலைவர்கள் மணப்பாறை நல்லுசாமி, ஜெயசீலன், வையம்பட்டி வட்டார தலைவர் தேக்கமலை கண்ணன், மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராஜு, மருங்காபுரி வட்டார தலைவர்கள் சுந்தரம், கண்ணன், அடைக்கன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி பொன்னுசாமி, அழகர்சாமி, சி.எம்.ராமசாமி, இளைஞரணி ஜெரால்டு, சி.என் ஆர் நல்லுசாமி, வலை தளம் ராஜேந்திரன், விவசாய அணி புத்தாநத்தம் அழகர்சாமி, திருவெறும்பூர் வட்டாரத் தலைவர் பி.சக்திவேல், துவாக்குடி நகரத் தலைவர் ஜலால்கான், சிறுபான்மை பிரிவு சாகுல் ஹமீது, சூரியூர் விசுவநாதன், அருள் தேவராஜ், ஆண்ட்ரூஸ், கிருஷ்ணமூர்த்தி, மலையாண்டி, முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் ரேணுகாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.