திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 78- வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சமூக சேவகரும், தன்னாட்சி அமைப்பின் நிறுவனருமான நந்தகுமார் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களாகவும், சமூக நலனை காப்பவர்களாகவும் விளங்க வேண்டும். கிராம சபைகள் சிறப்புடன் செயல்பட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும். சுதந்திரத்திற்கு பிறகு படித்தவர்கள் எண்ணிக்கை மற்றும் தரம் உயர்ந்துள்ளது என்றார். பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் பேசுகையில், மாணவர்கள் நாட்டுப் பற்றுடன் விளங்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்கு உழைத்த தியாகிகளை நினைவு கூர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விழாவை முன்னிட்டு மாணவ – மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக மாணவன் ஹரிகிருஷ்ணன் வரவேற்று பேசினார். முடிவில் மாணவன் ஸ்டீவ் ஆலன் நன்றி கூறினார்.
Comments are closed.