திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில மகளிர் அணி செயலாளர் ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 60 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கி வரும் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகின்ற மாவட்ட, மாநகர, மகளிர் நிர்வாகிகள் கூட்டத்தில் பெரும் திரளாக பங்கு கொள்வது. ஒன்றிய, நகர, மாநகர புதிய நிர்வாகிகள் பட்டியலை உடன் தயார் செய்வது. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி பாசறை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மகளிர் அணி அமைப்பாளர்கள் பொற்கொடி, கயல்விழி, சிந்துஜா, ரம்யாபேகம் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.