தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி சக்கரபடி துறையில் 2 ஆண்கள் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், காவிரி சக்கரபடி துறையில் கருணகொல்லைத் தெருவை சேர்ந்த சௌந்தர்ராஜன் ( வயது 42), பாலக்கரை பெருமாண்டி தெருவை சேர்ந்த பாலகுரு(43) உட்பட 4 பேர் நேற்று மாலை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது போதைக்காக சௌந்தர்ராஜன் மற்றும் பாலகுரு தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்துள்ளனர். இதில், இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.