Rock Fort Times
Online News

“பொறி”வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை: ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது…!

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் முனியப்பன் ( 59). இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.  இவர், திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில், 1,200 சதுரஅடி கொண்ட ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.  அந்த மனையினை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக, திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.  விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.  அதனால், கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற முனியப்பன், அவரது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான நில அளவையர் முருகேசன் ( 34) என்பவரை அணுகி உள்ளார். அப்போது முருகேசன்  உட்பிரிவு செய்து தர  ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.  அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி முனியப்பன் இன்று(23-07-2024) முருகேசனிடம்  ரூ.10,000 லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் முனியப்பனிடமிருந்துசர்வேயர் முருகேசன், லஞ்ச பணத்தை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெற்றபோது அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் இதுபோல வேறு யார் யாரிடம் எல்லாம் லஞ்சம் வாங்கினார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்