திருச்சி விமான நிலையம் ஒயர்லஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அங்கு பயிலும் மாணவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அந்த பள்ளி உணவகம் ஆய்வு செய்யப்பட்டது. அந்த உணவகம் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்தது தெரியவந்தது.
மேலும், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாததும் தெரியவந்தது. அந்த பள்ளியின் உணவு தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளி உணவகம் மீது பிரிவு 56-இன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.