ராகுல் காந்தியை பிரதமராக்க ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் !
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நெ.1 டோல்கேட்டில் உள்ள ராஜ்பவன் ஹோட்டலில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் பூத் கமிட்டி விரைவாக அமைப்பது,
வருகின்ற 2024-ல் ராகுல்காந்தியை பாரத பிரதமராக ஆக்குவதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைத்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற
செய்வது , ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணதின் நோக்கங்களை கிராமங்கள் தோறும் மக்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் செய்வது, 2024-ல் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு குறித்து நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுப்போம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பாரதிதாசன் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.கலைச்செல்வன் என்கிற திருச்சி கலை தலைமை தாங்கினார். மாநில பொது குழு உறுப்பினர்கள் தொட்டியம் சரவணன், வழக்கறிஞர் மோகனாம்பாள், துணைசேர்மன் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கே.பி.ராஜா, இளையராஜா, ராஜராஜ சோழன் ஆகியோர் சிறைப்புரையாற்றினர்.கூட்டத்தில் வட்டார தலைவர்கள் குணசேகரன், நல்லேந்திரன், சாந்தகுமார், மாணிக்கம், ஐய்யமுத்து, மாசிலாமணி, சுப்ரமணி, அர்சுணன், மணிமாறன், தங்கவேலு, ரவிசங்கர் மற்றும் நகரத்தலைவர்கள் இளங்கோவன், ஆரோக்கியசாமி,ஆனந்த்பாபு, ரவிச்சந்திரன், ஞானகுரு, ராமநாதன், சுந்தரராசு, சேகர், வீரப்பன், ஜெயராமன், தொட்டியம் சக்திவேல் மற்றும் அணித்தலைவர்கள், தனபால், முகமது ஜான், புருஷோத்தமன் மற்றும் மகளிர் பரமேஸ்வரி, அகிலாம்பாள் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.