Rock Fort Times
Online News

அதீத ஆசை அம்பேல் ஆக்கியது ஆன்லைனில் வலைவிரித்த மோசடி கும்பலிடம் ரூ.13 லட்சத்தை இழந்த திருச்சி நபர்

திருச்சி அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 49). இவரது பேஸ்புக்கில் தனியார் கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக லாபத்தில் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.இதை நம்பிய அவர் வாட்ஸ் ஆப் குரூப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து வாட்ஸ் ஆப் குரூப்பில் அந்த தனியார் கம்பெனி பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தியத்தை தொடர்ந்து, சந்திரசேகர் தன்னுடைய பணம் ரூ 13 லட்சத்து 15 ஆயிரத்து 500 பணத்தை முதலீடு செய்துள்ளார். பிறகு முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அந்த தனியார் கம்பெனியை சேர்ந்த பெண் தொடர்ப்பு கொண்டு பேசி, மேலும் ரூ. 40 லட்சம் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி தருவதாக கூறினர்.அதற்கு சந்திரசேகர் மறுத்ததோடு ஏற்கெவே தான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கூறினார். இதை தொடர்ந்துஅப்பெண் செல்போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

சந்திரசேகர் மீண்டும் அந்த செல்போனை தொடர்பு கொண்டபோது பேச முடியவில்லை. இதையடுத்து அவர் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. இது குறித்து சந்திரசேகர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரிடம் பணத்தை பறித்த கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்