திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலையில் பிரபல ரவுடி கோர்ட்டில் சரண் கூலிப்படையாக செயல்பட்டது அம்பலம்
திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்னி சேகர். இவரது சகோதரர் பெரியசாமி. இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக பங்காளிப்பகை இருந்து வருகிறது. இருதரப்பினரும் பன்றி வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். இதில் தொழில் ரீதியாக போட்டியும் நிலவி வந்தது. . இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேகர் கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு எதிர்த்தரப்பில் பெரியசாமியின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் கொலை செய்யப்பட்டார். எனவே, மேலும் இரு குடும்பத்தினரிடையே முன்விரோத பகை இருந்து வருகிறது. கேபிள் சேகரின் மனைவி கயல்விழி, zமுன்னாள் திருச்சி மாநகராட்சி வார்டு கவுவ்சிலர். இவரது மூத்த மகன் முத்துக்குமார் (28). இவர் மீது, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் அருகே கடந்த 29ந்தேதி பகல் 11 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பைக்குகளில் வந்த 6 பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து முத்துக்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் உயிரிழந்தார். இதையடுத்து பைக்குகளை அங்கேயே விட்டு விட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி சென்றனர். பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடியிருந்த இடத்தில் நடந்த இந்த கொலைச் சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் விட்டுச்சென்ற பைக்குகளையும் கைப்பற்றினர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பெரியசாமி தரப்பை சேர்ந்த லோகநாதன், இளஞ்செழியன்,குமரேசன், தினேஷ், தங்கமணி, பிரசாத் உள்ளிட்ட 6 பேர் 3 பைக்குகளில் வந்து முத்துக்குமாரை படுகொலை செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து அரியமங்கலம் காவல் ஆய்வாளர் அன்புச்செல்வம் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வந்தனர். இதில் லோகநாதன், இளஞ்செழியன், குமரேசன், , தங்கமணி ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அரியமங்கலம் காந்தி தெருவை சேர்ந்த பிரசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலத்துக்கு வந்தது. இதையடுத்து இந்த கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட, காந்தி மார்க்கெட் சரித்திர பதிவேடு ரவுடி முபாரக் (எ) தக்காளி முபாரக், திருச்சி ஜே.எம்-6 நீதிமன்றத்தில் இன்று சரணடைந்ததார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Comments are closed.