Rock Fort Times
Online News

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த கடத்தல் தங்கம் அதிகாரிகள் சோதனையில் சிக்கியது

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக, திருச்சி விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளும் தங்க கடத்தல் மாஃபியாக்கள் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வருகிறார்கள். இது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த பேக்கின் ஸ்குரு பொருத்தி உள்ள பகுதியில் ஸ்குருவை நீக்கி பார்த்தபோது அதற்குள் சிறிய ஆணி வடிவில் தங்க கம்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை 235 கிராம் எடை இருந்தது. அதன் மதிப்பு ரூ.16.17 லட்சம். இது தொடர்பாக அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனைர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்