திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் என்கிற சக்திவேல் (வயது 47). இவர் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர், குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆனந்தகுமார் என்ற வாலிபர் குடிபோதையில் அங்கு வந்து தங்க வேலுவிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், காயம் அடைந்த தங்கவேலை தொழிலாளர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆனந்தகுமார் மீது எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.