திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 77). ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், கோர்ட் உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 19-ம் தேதி அவருக்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டது. உடனடியாக, சிறை அதிகாரிகள் அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமச்சந்திரன் இறந்தார்.
இதுகுறித்து , சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.