Rock Fort Times
Online News

வருகிற ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று அறிவிப்பு…!

‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப
தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கான முதல் முகாமை தர்மபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து 36 ஆயிரம் இடங்களில் இந்த முகாம்கள் நடந்து வருகிறது. மேலும், வீடுகள்தோறும் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (30-07-2023) செயல்படும்.  இதனை ஈடு செய்யும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளும் ஆகஸ்ட் 26ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என உணவுத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்