இந்திய அரசு வழங்கும் பத்ம விருதுக்கு தகுதியானவர்கள், ஜூன் 28க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப திருச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேன்மை பொருந்திய பணிகளுக்காக, இந்திய அரசு பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில், மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு,2025ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்கப்படும். தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகிய வித்தியாசமின்றி வழங்கப்படும் விவரம் அறிய https //awards.gov.in மற்றும் https //: padmaawards.gov.in என்ற இணையதளத்திலிருந்து, பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் மூன்று நகல்களை, ஜூன் 28க்குள் கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்கள், கலெக்டரின் பரிந்துரையுடன் அரசு அனுப்பப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
1
of 872
Comments are closed.