காலை தொடங்கி இரவு தூங்கும்வரை, பல இளசுகளுக்கு சோசியல் மீடியாதான் பொழுதுபோக்கு என்றாகிவிட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அக்கவுண்ட் தொடங்கி, பைக் வீலிங் செய்வது,பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்களை பதிவிடுவது , பட்டா கத்திகளை கையில் வைத்துக்கொண்டு பவுசு காட்டும் போட்டோக்களை அப்லோட் செய்வது என இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதை கண்காணித்து அவ்வப்போது தமிழக காவல்துறையும் நடவடிக்கையை எடுத்துவருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில், பிரகாஷ் என்ற இளைஞர் அவரது ஆல்டர் செய்யப்பட்ட டிவிஎஸ் 50 பைக்கில் படுத்தவாறு ஆபத்தான முறையில் பைக் ஓட்டியதோடு,அதை இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சியை பார்க்கும் பலரும் அதிர்ந்துள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, லைக்குகளை அள்ளிக் குவிக்க ஆசைப்பட்டு இவரைப்போன்ற இளைஞர்கள், இதுபோல் செய்யக்கூடும் என்பதால் காவல்துறை இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments are closed.