Rock Fort Times
Online News

வீர, தீர செயல்களுக்கான ஜூவன் ரக்ஷா பதக்க விருதுகள் தகுதியானோர் விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு.

இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் “ஜீவன் ரக்ஷா பதக்” விருதானது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள்,தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் லூவீர தீர செயல்களுக்கான ஜூவ ரக்ஷா பதக்க விருதுகள்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பீரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,  மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா புதக்கம் மற்றும் விருதும்,
துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்டவர்களுக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் விருதும், தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காத்தவர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்கம் விருதும் மத்திய அரசின் மூலம் வழங்கப்படுகிறது. அதன்படி 2021-2022ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் பதிவிறக்கலாம்.

அக்டோபர் 2022ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2024ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 3 பிரதிகளுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரிக்கு வரும் 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்