Rock Fort Times
Online News

ஓய்வுபெற்ற திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபுவுக்கு பிரிவு உபசார விழா…!

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது என்ற தார்மீக மந்திரத்தை கடைபிடித்து பணியாற்றியவர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி  கே.பாபு. பல்வேறு சிக்கலான வழக்குகளில் கூட திறம்பட செயல்பட்டு சரியான தீர்ப்பை வழங்கி அனைவரின் பாராட்டை பெற்றவர்.
சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களோடு எவ்வித பாகுபாடும் பார்க்காமல் அனைவரோடும் அன்போடும், பாசத்தோடும் பழகிய இவர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு  திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.  விழாவில், மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்தாஸ், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார், இணை செயலாளர் விஜய நாகராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.

விழாவில், தலைமை குற்றவியல் நீதிபதி மீனாசந்திரா மற்றும் நீதிபதிகள் மகாலட்சுமி, ஜெயப்பிரதா,   மணிமேகலை, சுபாஷினி, கே.ஆர். பாலாஜி, சிவகுமார், எம்.பாலாஜி, அரசு வழக்கறிஞர் சவரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  பி. வி.வெங்கட் செய்திருந்தார்.
*

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்