திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அவைத்தலைவர்கள் .பேரூர் தர்மலிங்கம் அம்பிகாவதி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளரும், மேயருமான மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி,எஸ்.ஸ்டாலின் குமார் , ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், டோல்கேட் சுப்பிரமணி, சேர்மன் துரைராஜ், சிவந்தலிங்கம் என்.எஸ்.கருணைராஜா, மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ், மயில்வாகனன், மத்திய மாவட்ட ஆதி திராவிடர் நலக் குழு துணை துணை அமைப்பாளர் பெருவை இன்ஜினியர் எஸ்.முருகவேல்,தொமுச குணசேகர் கருணாநிதி, காஜாமலை விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது,நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளரின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றிகளும் பாராட்டுகளையும் தெரிவிப்பது, அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed.