திருச்சி, சிறுகனூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவுப் பேருந்தை பைக்கில் முந்தி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.இவரது கூட வந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி அண்ணாசாலை தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் நவீன் (21). இந்திரா நகரை சேர்ந்த தமிழ்வாணன் (21) மற்றும் சச்சின் ஆகிய மூவரும் மோட்டார் பைக்கில் திருச்சியில் இருந்து செஞ்சேரி நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் தேனி மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்த செந்தில்குமார் (52) அரசு விரைவு பேருந்தை சென்னை நோக்கி இயக்கி கொண்டிருந்தார். இந்நிலையில், சிறுகனூர் அருகே நெடுங்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நவீன் பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் நிலைத்திடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த இரண்டு நண்பர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த தமிழ்வாணன் மற்றும் சச்சினை மீட்டு சிகிச்சைக்காகவும், விபத்தில் உயிரிழந்த நவீன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments are closed.