திருச்சி அஸ்வின்’ஸ் ஸ்வீட்ஸ் கடையில் ரூ.2.50 லட்சம் கொள்ளை !
கோட்டை குற்றப்பிரிவு போலீசார் "ரகசிய" விசாரணை...
பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு அஸ்வின்’ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனம், பெரம்பலூர், திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் கிளைகளை அமைத்து ஸ்வீட்ஸ் மற்றும் காரம் விற்பனை செய்து வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கேக் விற்பனையும் நடந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அஸ்வின்’ஸ் ஸ்வீட்ஸ் கடையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்த பிறகு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். அந்த நேரத்தில் அஸ்வின்’ஸ் ஸ்வீட்ஸ் கடைக்கு வந்த கொள்ளையர்கள் கடையின் மீது ஏறி மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து மேலாளர் செந்தில் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். கடையின் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை கண்டறியும் முதற்கட்ட பணியினை போலீசார் துவக்கியுள்ளனர். பிரபல அஸ்வின்’ஸ் ஸ்வீட்ஸ் கடையில் கொள்ளை நடந்த சம்பவம் இதுவரை தகவல் வெளியே தெரிவிக்கப்படவில்லை என்பதும், சில மாதங்களுக்கு முன்பு திருச்சி திருவெறும்பூர் அஸ்வின்’ஸ் கிளையில் தீப்பிடித்த சம்பவம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.