திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவில் பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அதனைத்தொடர்ந்து அவர் சின்ன கடைவீதி, சவுக், பாபு ரோடு, வடக்கு, தெற்கு ஆண்டாள் வீதிகள், தெப்பக்குளம் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது வழியில் ஒரு டீக்கடையில் வேட்பாளர் கருப்பையா மற்றும் அதிமுக நிர்வாகிகள் தேநீர் அருந்தினர். அப்போது கடைக்கு வந்தவர்களிடமும் வாக்கு கேட்டனர். முன்னதாக மலைக்கோட்டை வாசலில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா ஆகியோர் தலைமையில் வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் , முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, எம்ஜிஆர் மன்றம் கலிலுல் ரகுமான், பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குமார், ரோஜர், வெல்லமண்டி சண்முகம், ஏர்போர்ட் விஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். பிரச்சாரத்தின் போது வேட்பாளர் கருப்பையாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அதிமுக தொண்டர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.தொடர்ந்து மேல சிந்தாமணி, சத்திரம் பஸ் நிலையம், பாலக்கரை, எடத்தெரு, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.