இளைஞர்கள் பயன் பெறும் வகையில் திருச்சியில் மென்பொருள் நிறுவனங்கள் கொண்டு வருவேன்- திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் வாக்குறுதி…!
தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் அறிமுகம் கூட்டம், மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வேட்பாளர் பேசியதாவது:- தமிழகத்தை ஆளுகின்ற திராவிட தீய சக்தி கூட்டணி வலுவான கூட்டணி என்று கூறி வருகின்றனர். அப்படி வலுவான கூட்டணி என்றால் ஏன் திருச்சி தொகுதியில் திமுகவிலிருந்து யாரும் போட்டியிடவில்லை?. அவர்கள் கடந்த தேர்தலில் காங்கிரசுக்கும், தற்போது மதிமுக விற்கும் கொடுத்துள்ளனர். ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் அவர்கள் கட்சியில் இருந்து ஒருவர் கூட வேட்பாளராக வெற்றிபெற முடியாது என்று. பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள் என்று கூறுகின்றனர். நாட்கள் சுயேட்சை வேட்பாளர்கள் தான். ஆனால் சுயமரியாதை கொண்ட வேட்பாளர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதும் காலம் இது. நான் வெற்றி பெற்றால் திருச்சி தொகுதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் மென்பொருள் நிறுவனத்தை கொண்டு வருவேன்.
கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் கேட்டுகொள்வது ஒன்று மட்டும் தான். மோடியின் வெற்றி சின்னமாம் குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . நாம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.