திருச்சி 24-வது வார்டில் ரூ.7.85 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்கு – குடிநீர் தொட்டி…
திருநாவுக்கரசர் எம்.பி திறந்து வைத்தார்...
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5க்குட்பட்ட 24-வது வார்டு குளத்துமேடு சாலை சந்திப்பு பகுதியில் திருச்சி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. மேலும் குளத்துமேட்டில் ரூ.2.85 லட்சத்தில் மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று ( 07.06.2023 ) நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் சோபியா விமலா ராணி வரவேற்றார். இதில், திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் கலந்து கொண்டு உயர் கோபுர மின்விளக்கு மற்றும் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். தொடர்ந்து வார்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். விழாவில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பெனட், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் எல்.ரெக்ஸ், வக்கீல் சந்திரன், புத்தூர் சார்லஸ், மலர் வெங்கடேசன், ஜி.எம்.ஜி.மகேந்திரன், சிவா, செந்தூர் வாசன், எஸ் .சி. பிரிவு பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.