Rock Fort Times
Online News

 திருச்சி அரியமங்கலம் பகுதியில் குடிநீர் வினியோகம் ரத்து ….

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி- சென்னை மெயின்ரோடு பால்பண்னை அப்பல்லோ மருத்துவமனை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பணியினை மராமத்து செய்யும் பணி  இன்று ( 7.6.2023 )  மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக தேவதானம், விறகுபேட்டை புதியது, கல்லுக்குழி, ஜெகநாதபுரம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை ( 8.6.2023 ) குடிநீர் விநியோகம் இருக்காது. 9-ம் தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்…

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்