ஹரிணி ஜுவல்லர்ஸின் புதிய விரிவுப்படுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா…* திருச்சி, சிந்தாமணி பஜாரில் கோலாகலமாக நடைபெற்றது..!
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பஜாரில் இயங்கிவரும் ஹரிணி ஜூவல்லர்ஸின் புதிய விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்புவிழா இன்று ( ஜூன் 7 ) கோலாகலமாக நடைபெற்றது. இன்ஸ்டியூஷன் ஆஃப் வேல்யூவர்ஸ் தேசிய தலைவர் பி.கே.தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பனானா லீஃப் ஹோட்டல் நிறுவனர் ஆர்.மனோகரன், திருச்சி, ரெட்டியார் அறக்கட்டளை தலைவர் கே.மணிமாறன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்களை ஹரிணி ஜுவல்லர்ஸின் நிர்வாகத்தினரான ஆர்.கனகராஜ், மணிமேகலை கனகராஜ், ஆர்.செல்வராஜ், அனுசியா செல்வராஜ், அ.வெங்கடாசலம், சசிகலா வெங்கடாசலம், எஸ்.ராம்குமார், முல்லை ராம்குமார் ஆகியோர் வரவேற்றனர். இவ்விழாவில் திருச்சி மாவட்ட ரெட்டி நல சங்க செயலாளர் ரவி, கே.ஆர். டி.மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சுரேஷ், டோல்கேட் ரெட்டியார் நல சங்க தலைவர் மதிவாணன், எம்.ஆர்.ஜி ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் காந்தி, கரூர் மாவட்ட ரெட்டி நல சங்கத் தலைவர் பாலன், செயலாளர் அசோக்குமார், பொருளாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதுகுறித்து ஹரிணி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனரான எஸ்.ராம்குமாரிடம் பேசியபோது., கடந்த 12 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் பேராதரவைப் பெற்று எங்கள் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது புதிய விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா சிறப்பு சலுகையாக வருகிற ஜூன் 10ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நகைகள் அனைத்திற்கும் சேதாரத்தில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும், திருமண சீர்வரிசை வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லாமலும் வாங்கிக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு கேரட் வைர நகைகளுக்கும்vரூ.5000 சிறப்பு தள்ளுபடியும் உண்டு. எங்களிடம் மாதாந்திர தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து வாடிக்கையாளர்கள் பயனடையலாம் என தெரிவித்தார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஹரிணி ஜூவல்லர்ஸ் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.