திருச்சி, கொள்ளிடம் ஆற்றில் 2 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு! சலவைத்தொழிலாளர்கள் கவனமாக இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தல்
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் சலவை தொழிலாளர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்., கொள்ளிடம் ஆறு 4 லட்சம் கன அடி நீரை தாங்கும் திறன் கொண்டது. வெள்ள காலங்களில் இதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். தற்போது 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட உள்ளது. இது வெள்ள அபாயம் இல்லை. இருந்தபோதும் கரையோரம் வசிக்கும் சலவை தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Comments are closed.