Rock Fort Times
Online News

துறையூர் அருகே கோர விபத்து! புளியமரத்தின் மீது பேருந்து மோதி 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்  12க்கும் மேற்பட்டோர்  மேல் சிகிச்சைக்காக  திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  திருச்சி மாவட்டம் துறையூர் சத்யநாராயணன் சிட்டி அருகே, தம்மம்பட்டியில் இருந்து துறையூர் நோக்கி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை தம்மம்பட்டி மூளைப்புதூர் பகுதியை சேர்ந்த வரதராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.பேருந்து துறையூர் அருகே சத்யநாராயணன் சிட்டி என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்து புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் டிரைவர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  8 வயது சிறுமி உள்பட 12க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து துறையூர்,முசிறி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது. இடர்பாடுகளுக்கிடையே சிக்கிய டிரைவரை தீயணைப்புத்துறையினர்மீட்டனர்.  இது குறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இவ்விபத்தால் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்